அதிமுக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு மரக்கன்று வழங்கியும், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

அதிமுக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு மரக்கன்று வழங்கியும், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர்.

மதுரையில் வரும் 20ஆம் தேதி அதிமுக சார்பில் வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறு வதையொட்டி, அலங்காநல்லூர் அருகே குமாரம் பிரிவில், மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழக பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தொண்டர்களுக்கு மரக்கன்று வழங்கியும், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர். 


இதில், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, மாணிக்கம், சரவணன், தமிழரசன் ஒன்றிய செயலாளர்கள் காளிதாஸ், கொரியர் கணேசன், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமி, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் இளங்கோவன், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார், கூட்டுறவுத் தலைவர் மலர்கண்ணன், துணைத் தலைவர் ராகுல், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 


அமைச்சர் பேசுகையில், மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாடு ஒரு புது அத்தியாயத்தை உருவாக்கும் வகையில் பிரமாண்டமாக மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. மருத்துவ வசதி, கழிப்பறை வசதி, உணவு தயாரிப்பு கூடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad