கடலூர் மாவட்டத்தில் .திமுக ஆட்சியில் வடலூரும் கடலூர் ஆகி கொண்டிருக்கிறது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பெருமிதம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

கடலூர் மாவட்டத்தில் .திமுக ஆட்சியில் வடலூரும் கடலூர் ஆகி கொண்டிருக்கிறது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பெருமிதம்

திமுக ஆட்சியில் வடலூரும் கடலூர் ஆகி கொண்டிருக்கிறது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பெருமிதம்


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மில் வேளான்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் நெசவாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .

 குறிஞ்சிப்பாடி , சிங்கபுரி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் , அகர்கள்
  வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தொடக்கி வைத்தார் . தொடர்ந்து முத்ரா கடம் திட்டத்தின் கீழ் நெசவாளார்களுக்கு கடன் உதவி ஆணைகள் மற்றும் வீடு திட்டத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு பணி ஆணகள் ஊழங்கினார் .

நிகழ்ச்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில்

தமிழக மக்களின் பொருளாதார வளர்ச்சியின் முன்னெடுப்பு பணிகளாக தமிழ்நாடு முதல்வர் அவர்கள் பல்வேறு துறைகளின் வாயிலாக பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பயண்பெரும் வகையின் பண்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் . முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டும் கைத்தறி துறை . மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையும் இணைந்து நெசவாளர்களுக்கு இரத்த பரிசோதளை , [E CG . x - Ray உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் அடங்கிய சிறப்பு மருத்துவ முகாமில் அனைத்து நெசவாளர்களும் தங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் .

கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 30 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில்

குறிஞ்சிப்பாடி பகுதியில் மட்டும் 08 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன . இப்பகுதியில் 1503 நெசவாளர்கள் உள்ளனர் . மேலும் குறிஞ்சிபாடி பகுதியை சார்ந்த நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் 42 நெசவாளர்களுக்கு தலா ரூ .1.00 இலட்சம் வீதம் ரூ .42.00 இலட்சம் பதிப்பீட்டிலும் , 12 பயனாளிகளுக்கு தலா 50 ஆயிரம் வீகிதம்ரூ 6 இலட்சம் என ஆகமொத்தம் ரூ .48.00 இலட்சத்திற்கான கடன் உதவி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறையும் இணைந்து அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட 23 நபர்கள் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்குட்பட்ட 3 நபர்கள் என மொத்தம் 32 நபர்களுக்கு தலா 4 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.28 கோடி மதிப்பிட்டில கைத்தரி நெசவாளர்களுக்கு வீடு கட்டுமான பணிக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது .

கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் அந்தந்த பகுதி மக்களின் தேவைகளுக்கு கேற்றாற்போல் தயாரிப்பு மேற்கொண்டு கைத்தமியை மேம்படுத்தவேண்டும் . மேலும் நெசவாளர்களின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார் .

இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜராம் , , மாவட்ட வருவாய் அலுவலர் ம.ராஜசேகரன் அவர்கள் , கூடுதல் ஆட்சியர் மதுபாலன் ,  அவர்கள் , இணை இயக்குளர் மருத்துவ நலப்பணிகள்   , துணை இயக்குநர் ( சுகாதாரம் ) மீரா அவர்கள் , கைத்தறி துறை  மணிமுத்து  , செயற்பொறியாளர் , தமிழ்நாடு நகர்ப்புற பேம்பாட்டு 

பொறியாளர் குமாரதுரை அவர்கள் , மண்டல மேலாளர் இந்தியன் வங்கி கௌரிசங்கர்  கடலூர் சரகம் , கைத்தரி துறை அலுவலர்கள் , மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின்
பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .

கடலூர் மாவட்டம்
குறிஞ்சிப்பாடி செய்தியாளர்
தே.தனுஷ் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad