திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு உண்டாரபட்டி ஸ்டெல்லா நகரை சேர்ந்தவர் எட்வின் ஜோஸ்வா வயது 28 விவசாயி. இவரை கடந்த 21.6.23 அன்று உண்டாரப்பட்டி அருகே சந்தன வர்த்தினி ஆற்றுப்பாலம் பகுதியில் மர்ம கும்பல் ஒன்று அடித்து கொலை செய்தனர். வேடசந்தூர் போலீசார் நடத்திய விசாரணையில் திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்த அலெக்ஸ்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஒன்பது பேரை கைது செய்து திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் பரிந்துரையின் பேரில் முதல் குற்றவாளியான அலெக்ஸ்ராஜ் 25 என்பவரையும் விஷ்வா 22 என்பவரையும் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்த வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.
- தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் வேடசந்தூர் மணிமாறன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக