திருப்பத்தூர் அடுத்த நாரியூர் பகுதியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர்கள் இருவர் கைது செய்து விசாரணை- கந்திலி போலீசார் நடவடிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

திருப்பத்தூர் அடுத்த நாரியூர் பகுதியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர்கள் இருவர் கைது செய்து விசாரணை- கந்திலி போலீசார் நடவடிக்கை.


திருப்பத்தூர் மாவட்டம், கும்மிடிகாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்-ஜீவா தம்பதியரின் 2 - வது மகன் ஞான மூர்த்தி (28) இவர் கூலி வேலை செய்து வந்தார்.  இவருக்கு கஞ்சா அடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.  இவரும் மோட்டூர் பகுதியை சேர்ந்த சிவக்குமாரின் மகனான பூந்தமிழன்(21) நண்பர்கள். இருவரும் நண்பர்கள் இருவரும் தினமும் கஞ்சா அடிப்பதாக கூறப்படுகிறது.
 

ஞான மூர்த்தியின் பாட்டி வீடு நாரியூரில் உள்ளது. இவர் அங்கேயே தங்கி வேலைக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. கஞ்சா போதைக்கு அடிமையானதால் பல நண்பர்கள் நாரியூருக்கு வந்து சென்றுள்ளனர். நண்பர்கள் கஞ்சா அடிப்பதற்காக மலையில் மரத்தில் பரண் அமைத்துள்ளனர். கஞ்சா விலை அதிகம் என்பதால் தாமே கஞ்சா செடி வளர்க்க முடிவு செய்து எருக்கம் செடியை வேலியாக அமைத்து தினமும் எரு போட்டு தண்ணீர் ஊற்றி வந்துள்ளார்.
 

இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல கிடைத்தது. அதனை தொடர்ந்து இன்று விடியற்காலை கஞ்சா செடி வளர்த்தவரையும் கைது செய்தும், செடியையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கந்திலி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.  கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செடி சுமார் 3 கிலோவாகும் என்பது குறிப்பிடதக்கது. கடந்த ஒரு மாதமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கஞ்சாவினால் குற்றங்கள் அதிமாகி உள்ளதாக கூறப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கஞ்சா விற்கு அடிமையாகும் முன்பு காவல் துறை விழித்துக்கொள்ளுமா?


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad