மதுரை பள்ளி மேலாண்மை குழு வலுப்படுத்துதல் சார்ந்து ஒருநாள் பயிற்சி நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

மதுரை பள்ளி மேலாண்மை குழு வலுப்படுத்துதல் சார்ந்து ஒருநாள் பயிற்சி நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலம் பகுதி 3 மற்றும் 4 மண்டலத்தைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு வலுப்படுத்துதல் சார்ந்து ஒருநாள் பயிற்சி 5ஆம் கட்டமாக  மதுரை தெற்கு மண்டல பயிற்ச்சி அரங்கில் நடைபெற்றது. மூன்றாவது மண்டல தலைவி  பாண்டிச்செல்வி மண்டலம் நான்கு தலைவர்  முகேஷ் சர்மா உள்ளிட்ட 47 கவுன்சிலர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். 


தெற்கு வட்டார வளமைய, வட்டார கல்வி அலுவலர்  மோசஸ் அவர்கள் துவக்கி வைத்து கட்டாய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு சார்ந்து விளக்கினார். பள்ளி மேலாண்மை குழு பயிற்சிக்கான முதன்மை கருத்தாளர்கள்  பிச்சை (சமுதாய அமைப்பாளர் மாநகராட்சி)  கருணாகரன் ஆசிரியர் பயிற்றுனர் கிழக்கு ஒன்றியம் பயிற்சிகளை வழங்கினர். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு செந்தில் வேல் குமரன், உமா வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரேகா ஆசிரியர் பயிற்றுனர் சுரேஷ் TNSF மாலை மதி ஆகியோர் பயிற்சியை  ஓருங்கமைத்தனர். 


பயிற்சி பள்ளியின் வளர்ச்சி குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வது நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு அவசியமானது என்ற புரிதலை அனைவருக்கும் உறுதிப்படுத்தப்பட்டது. பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் அடிப்படையில் பள்ளி வளர்ச்சி முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பும் நடைபெற உள்ளாட்சி அமைப்புகளில் பங்கு இன்றைய அமையாது என்பது  பயிற்சியின் நோக்கமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad