கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அந்தேரிப்பட்டி ஜங்ஷன் பகுதியில் ஊத்தங்கரை பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வாகனம் வந்து கொண்டு இருந்தது அப்பொழுது அந்தேரிப்பட்டி ஜங்ஷன் பகுதியில் இருந்து ஊத்தங்கரை நோக்கி சாலையின் இடதுபுறம் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஏது காவல்துறை வாகனம் அருகில் இருந்த பேக்கரி கடைக்கு செல்வதற்காக அதிவேகமாகவும் அஜாகாரத்தியாகவும் கவனக்குறைவுடனும் வந்த காவல்துறை வாகன ஓட்டுனர் எதிரே வந்த இருசக்கர வாகனம் எது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தாய் மற்றும் மகன் பலத்த காயம் ஏற்பட்டது, இதில் வாகனத்தை ஓட்டி வந்த கொண்டிரெட்டிபட்டி கிராமப் பகுதியை சேர்ந்த பத்மநாபன் (27) என்பவருக்கு இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் பின்னால் உட்கார்ந்து வந்த தாய் சென்னம்மாள் என்பவருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் அதிக காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அருகில் இருந்த நபர்கள் உடனடியாக அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ பகுதிக்கு காவல் ஆய்வாளர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார், காவல்துறை வாகனம் என்பதால் வழக்கு ஏதும் பதியப்பட மாட்டாது எனவும் சமரச பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர், காவல்துறை வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
காவல்துறை வாகனமே பொறுப்பாற்ற முறையில் பொதுமக்களை மோதி விபத்து ஏற்படுத்தியது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்த சூழ்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திண்டிவனம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடி சாலை மறியலில் ஈடுபட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக