நாகர்கோவில், மார்த்தாண்டத்தில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 செப்டம்பர், 2023

நாகர்கோவில், மார்த்தாண்டத்தில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டு.

நாகர்கோவில் : கோட்டார் பஜனைமட தெருவை சேர்ந்தவர் துளசிராம் (வயது 56). இவர் நாகர்கோவிலில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. இதுகுறித்து துளசிராம் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருட்டு நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சி களை கைப்பற்றி போலீசார் தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோ வில் நகரில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட மார்த்தாண்டம் பழைய தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் மணிபாலன் (28), இவர் பம்மம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 15-ந்தேதி பம்மம் பெட்ரோலியம் அருகாமையில் அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பணிக்கு சென்றுள்ளார். பின்னர் மதியம் வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனத்தை யாரோ திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கன்னியாகுமரி மாவட்டம் செய்தியாளர் என் .சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad