வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உடல் உறுப்பு தான விழா.
ஆந்திரமாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா செல்வமணி பங்கேற்பு.
வேலூர் மாவட்டம், அணைகட்டு தாலுகா, திருமலைக்கோடி ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உடல் உறுப்பு தான விழா மருத்துவமனை தலைவரும்,மருத்துவமனை இயக்குனருமான மரு.பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக ஆந்திரமாநிலம் சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா செல்வமணி, திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் மற்றும் நாராயணி மருத்துவணை குழும தலைவரும், இயக்குநருமான மரு.பாலாஜி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து விவரிக்கப்பட்டது. இவ்விழாவில் மருத்துவமனை கண்காணிப்பாளர், மருத்துவதுறை சார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக