திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக உயிர் நீத்த போராளி அனிதாவுக்கு திருப்பூர் தெற்கு எம் எல் ஏ தலைமையில் நினைவஞ்சலி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 செப்டம்பர், 2023

திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக உயிர் நீத்த போராளி அனிதாவுக்கு திருப்பூர் தெற்கு எம் எல் ஏ தலைமையில் நினைவஞ்சலி!

நீட் தேர்வுக்கு எதிராக உயிர் நீத்த போராளி அனிதாவுக்கு திருப்பூர் தெற்கு எம் எல் ஏ தலைமையில் நினைவஞ்சலி! 


மருத்துவ மாணவர்களின் கனவுலகினை சிதைக்கும் நீட் தேர்வினை ரத்து செய்திட, எதையும் பொருட்படுத்தாது தன் உயிரையும் துச்சமென கருதி மாய்ந்து போன தமிழர்கள் இதயங்களில் குடியிருக்கும் மாணவி அனிதாவின் நினைவு தினத்தையொட்டி, திருப்பூர் வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில், சிக்கனா அரசு கலைக் கல்லூரியில் நீட் எதிர்ப்பு போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வில் மாணவி அனிதாவின் திருஉருவ படத்திற்கு திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்எல்ஏ., மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் தெற்கு மாநகர செயலாளர் டி. கே. டி. மு.நாகராசன், மாவட்ட அவைத் தலைவர் க.நடராசன், பகுதி செயலாளர் மியாமி அய்யப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் குணராஜ், மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டக்கழக செயலாளர் செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் கோபு, மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் எம்.எஸ்.மணி மற்றும் 14 வது வட்டம் சார்பில் வட்ட கழக செயலாளர் மு.ரத்தினசாமி மற்றும் 14 வந்து வட்ட நிர்வாகிகள் கல்லூரி மாணவ மாணவியர்கள், திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


மாவட்ட செய்தியாளர்
அ.காஜா மைதீன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad