அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த மாபெரும் விழிப்புணர்வு கண்காட்சி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த மாபெரும் விழிப்புணர்வு கண்காட்சி.

கும்பகோணம்  அரசு சமூக வானொலி 90.4 சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த மாபெரும் விழிப்புணர்வு கண்காட்சி,  அரசு இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சியில் 500க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு புவிபாதுகாப்பு மற்றும்  சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான ஓவியங்கள் மற்றும் நவீன ஓவியங்களைக் காட்சிப்படுத்தினர். 

அத்துடன் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யக்கூடிய வகையிலான கைவினைப் பொருட்களையும் செய்து  மாணவ மாணவியர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர். தி. பாலமுருகன்,  துணைமுதல்வர் முனைவர். கலைமணி சண்முகம், கல்விப்புலத் தலைவர் முனைவர். எம். ருக்மாங்கதன் மற்றும் அரசு சமூக வானொலி ஒருங்கிணைப்பாளர் முனைவர்.இரா.விஜயராகவன்  ஆகியோர்கள் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினர். 

இக்கண்காட்சிக்கு  சிறப்பான முறையில் விழிப்புணர்வு படைப்புகளை உருவாக்கிய 10 பள்ளிகளுக்கு "சிறந்த பங்களிப்பிற்கான விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் அரசு சமூக வானொலி உறுப்பினர்களும் மற்றும் கல்லூரி பேராசிரியர்களும் இக்கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். இக்கண்காட்சியில் ஏராளமான படைப்புகள் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/