புதுச்சேரி மாநிலம் சொரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இருசப்பன் இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார், இந்த நிலையில் விழுப்புரம் அடுத்துள்ள பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த மின்சாரத்துறையில் பணியாற்றி வரும் மின் ஊழியர் ரவிச்சந்திரன் என்பவர் பில்லூர் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது என்று கூறி போக்கியத்திற்கு நிலம் வாங்கித் தருவதாகவும் போலி ஆவணங்கள் காட்டி தன்னுடைய நிலம் தான் என்று வேறு நபரின் விவசாய நிலத்தை காட்டி மின் ஊழியர் ரவிச்சந்திரன் ரூபாய் ஒரு லட்சம் வேண்டும் என கேட்டு நாள்தோறும் வங்கிக் கணக்கில் இருந்து ஜி பே மூலம் 4,000 ,5,000 10,000 20,000 என சுமார் 94 ஆயிரம் வரை பணம் பெற்று தற்பொழுது ஏமாற்றி வருகிறதாகவும் இதுகுறித்து விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த பயனும் இல்லை ஒருமுறை மட்டும் 8000 ரூபாய்க்கு வழங்கியதாகவும் மீதமுள்ள பணத்தை கேட்டால் போலீசார் மின் ஊழியர் ரவிச்சந்திரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறியும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ரவிச்சந்திரன் கைது செய்வோம் பாதிக்கப்பட்ட தங்கள் பணத்தை பெற்று தருமாறு விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் அவர் மனு அளித்தார்.
அப்பொழுது இது குறித்து தங்களுடைய பணத்தை பெற்று தருவதற்கு என நடவடிக்கையில் தாலுகா போலீசார் மெத்தனம் காட்டுவதாகவும், பாதிக்கப்பட்ட எனக்கு பணத்தை மீட்டுத் தந்து ஏமாற்றிய நபரை கைது செய்ய வேண்டும் என அவர் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக