மாநில தடகள போட்டியில் தங்கம் வென்ற அகஸ்தீஸ்வரம் அரசு பள்ளி மாணவிக்கு நிதி உதவி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

மாநில தடகள போட்டியில் தங்கம் வென்ற அகஸ்தீஸ்வரம் அரசு பள்ளி மாணவிக்கு நிதி உதவி.

மாநில அளவிலான 37-வது இளையோர் தடகள போட்டியில் அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி தனுஷா நீளம் தாண்டும் போட்டி மற்றும் 1000 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார். இவர் அடுத்த மாதம் (அக்டோபர்) நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 



இதைத்தொடர்ந்து அவருக்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு வாழ்த்துக் களையும், பாராட்டுக்களை யும் தெரிவித்தார். மேலும் அந்த வீராங்கனைக்கு நிதி உதவியும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொன்ஜான் சன், மாவட்ட பிரதிநிதி தமிழ்மாறன், வார்டு செயலாளர் கிருஷ்ணகுமார், அகஸ்தீஸ்வரம் வட்டார காங்கிரஸ் துணை தலைவர் அரிகிருஷ்ண பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


- கன்னியாகுமரி மாவட்டம் செய்தியாளர் என். சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad