எட்டையபுரத்தில் உள்ள பாரதியாரின் வீட்டை நினைவகமாக மாற்றிய பெருமை கருணாநிதியையே சேரும் என்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

எட்டையபுரத்தில் உள்ள பாரதியாரின் வீட்டை நினைவகமாக மாற்றிய பெருமை கருணாநிதியையே சேரும் என்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.


திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி அரங்கில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் "பாரதியும் திரை இசை பரதமும் "என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பாரதியார் கவிதைகளை கொண்டு திரையில் வந்த பாடல்களுக்கு பரத நாட்டியம் மற்றும்  தெருக்கூத்து நடனத்தை கண்டு ரசித்தார். தொடர்ந்து அவர் பரத நாட்டியம் ஆடிய மாணவிகளுக்கும் தெருக்கூத்து கலைஞர்களுக்கும் நினைவு பரிசு வழங்கினார்.


அப்போது அவர் பேசியதாவது:- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பாரதியாரின் படைப்புகள் அனைத்தும் குறும்படமாகவும், நாடகங்களாகவும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.          


பாரதியாரின் புகழ் நீண்ட காலத்திற்கு நிலைத்து இருக்க வேண்டும் என்பதற்காக தான் தற்பொழுது முதல் அமைச்சர் இந்த நிகழ்ச்சிகளை நடத்துவது மட்டுமின்றி பாரதியாரின் நினைவு நாளை மகாகவி நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளார். பாரதியாரின் படைப்புகள் வைத்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தவும் உத்திரவிட்டுள்ளார், இவ்வாறு அவர் பேசினார்.                      


நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன், அம்பேத்கார், ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பார்வதி சீனுவாசன், ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி, திரைப்பட பிரிவு தலைமை தயாரிப்பாளர் ரவி, அருணை மருத்துவ கல்லூரி முதல்வர் குணசிங், மருத்துவ கண்காணிப்பாளர் குப்புராஜ், திமுக நிர்வாகிகள் இரா.ஸ்ரீதரன், கார்த்திக்வேல்மாறன், பிரியா விஜயரங்கன் உள்பட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பெ.சதீஷ் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/