திருமங்கலம் வட்ட அனைத்து விஷ்வகா்மா நல சங்கத்தின் சாா்பில் விஷ்வகா்மா ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது۔
விழாவிற்குசங்கத்தின் தலைவா் வையத்துரை தலைமை தாங்கினாா்۔விழாவில் விஷ்வகா்மா ஜெயந்தியை முன்னிட்டு விஷ்வகா்மா படத்திற்கு மாலை அணிவித்து அனைவரும்மலரஞ்சலி செலுத்தினாா்கள்۔விழாவில்பேசிய அனைவரும் விஷ்வகா்மா சமுதாயத்தை மிகவும் பிற்பட்டோா் பட்டியலில் சோ்க்க வேண்டியும்,வேலை பூா்த்தியடையாமல் திறப்புவிழா நடைபெறாமல் பாதியில் நிற்கும் MK தியாகராஜ பாகவதா் மணிமண்டபத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் மணிமண்டபத்தை திறக்க கோாியும், ஆலய அறங்காவலா்களாகஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒரு விஷ்வகா்மாவைவையும் நியமிக்க வேண்டியும், தமிழக அரசை வலியுறுத்தினாா்கள்۔
விழாவில் சங்கத்தின் செயலாளா் துரை۔சண்முகம், பொருளாளா் சரவணன், துணைசெயலாளா் சண்முகம், தலைமை ஆசிரியா் சுப்பிரமணியன், ஆசிாியா் ஜீவன்மூா்த்தி,V.ராஜூ ஆச்சாாி,PRC ராஜா, V.பால்பாண்டி, மற்றும் திரளானவா்கள் கலந்துகொண்டனா். விழாவில் இறுதியின் பூமிநாதன் நன்றி தெரிவித்தாா்۔விஷ்வகா்மா ஜெயந்தி விழாவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்: விஷ்வகா்மா ஜெயந்தி அன்று தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்۔
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக