சிவகங்கை மாவட்டத்தில் கட்சியில் சேர வலியுறுத்தி இளைஞரை தாக்கிய கும்பல் மீது வழக்கு பதிவு.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா பதினெட்டாம்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன், இவரது மகன் பெயர் ஆரியசெல்வம். இந்த இளைஞரை இடைக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் கண்ணன் என்பவர் தான் வகிக்கும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் என்னும் கட்சியில் இணையுமாறு பல மாதங்களாக வலியுறுத்தி மிரட்டல் விடுத்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஆரியசெல்வமோ தனக்கு கட்சியில் இணைய விருப்பமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் சுரேஷ்குமார், ராசு, கார்த்தி மற்றும் திவாகர் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து இவரை இரும்பு கம்பியால் தாக்கியதோடு மட்டுமல்லாமல் கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரியவருகிறது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்ததன் பேரில் மானாமதுரை நகர் காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக