திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளின் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் தலைமையில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.
அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட நிறைகள் குறைகள் பற்றி கூறினர்.
இதில் 25 -வது வார்டு உறுப்பினர் பர்வீனா பேகம் பேசுகையில் எனது வார்டு வரைபடத்தில் அத்திப்பட்டி காணாமல் போனது போல எனது வார்டு காணாமல் போய விடும். வார்டுகளில் எந்த பணியும் நடைபெறுவதில்லை என்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பழுதடைந்துள்ளது. அதை அப்புற படுத்த புகார் மனு கொடுத்துள்ளேன். நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். தனது கட்சியை சேர்ந்தவர்களுக்கே இந்த நிலைமை என பேசியதால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் தற்போது அனைத்து பல வார்டுகளில் சீர்கெடு ஏற்படுத்துகிற குப்பைகளை அகற்றாமல் குப்பை கூடாரமாக மாறி வருகிறது என்றனர்.
மேலும் திருப்பத்தூர் நகர பகுதிகளில் நாய் மற்றும் பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது.
என குற்றச்சாட்டினர் மேலும் குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மை நகரமாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு அரசு அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக