திருப்பத்தூர் மாவட்டத்தில் மறு சீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல் குறித்த ஆலோசனை கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

திருப்பத்தூர் மாவட்டத்தில் மறு சீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல் குறித்த ஆலோசனை கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

மறு சீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல் குறித்த ஆலோசனை கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.


தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான 1038 வாக்குச்சாவடிகள் அடங்கிய வாக்குச்சாவடி பட்டியலை கடந்த 24 ஆம் தேதி வெளியிட்டார். 


இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிகளில் 259 வாக்குச்சாவடிகள், ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் 245 வாக்குச்சாவடிகள், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 267 வாக்குச்சாவடிகள் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 267 வாக்குச்சாவடிகள் என மொத்தமாக 1038 வாக்குச்சாவடிகள் வரைவு பட்டியலில் இடம் பெற்று இருந்தது. 


மேலும் அரசியல் கட்சிகள் பொதுமக்கள் எவருக்கேனும் இது குறித்து ஏதேனும் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் இருப்பின் எழுத்துப்பூர்வமான கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வாக்காளர் பதிவு அலுவலர் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர்களுக்கு வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் வெளியிடப்பட்ட ஏழு நாட்களுக்குள் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்திருந்தார். 


அதன் அடிப்படையில் இன்று இறுதி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வழங்க மாற்றங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்த ஆலோசனை கூட்டம் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


அப்போது சடையனுர் வெங்கடேஸ்வரா நகர் திருமால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாற்றங்கள் வேண்டும் என்று சமூக ஆர்வலர் பெருமாள் மற்றும் தேமுதிக சார்பாக மதன் மற்றும் சரவணன் கோரிக்கை வைத்தனர். 


இதனை தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று திருத்தப்பட்ட இறுதி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பலர் பங்கு பெற்றனர்.


மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad