வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம், பெரிய போடிநத்தம் கிராமத்தில் காட்டு யானை தாக்கி மரணம் அடைந்த வசந்தா (வயத 54) அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 5 இலட்சம் இழப்பீடு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம், பெரிய போடிநத்தம் கிராமத்தில் காட்டு யானை தாக்கி மரணம் அடைந்த வசந்தா (வயத 54) அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 5 இலட்சம் இழப்பீடு

காட்டு யானை தாக்கி பெண் பலி


வேலூர் மாவட்டம்
காட்பாடி வட்டம், பெரிய போடிநத்தம் கிராமத்தில் காட்டு யானை தாக்கி மரணம் அடைந்த  வசந்தா (வயத 54) அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 5 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சி தலைவர் பெ. குமாரவேல் பாண்டியன், IAS அவர்கள் தெரிவித்துள்ளார்.


வேலூர் மாவட்டம், காட்பாடி, பெரிய போடிநத்தம் கிராமத்தில் வசித்து வந்த திருமதி வசந்தா என்பவர் இன்று அதிகாலை காட்டு யானை ஒன்று தாக்கி மரணம் அடைந்தார். இந்நிலையில் வனத்துறையின் சார்பில் வன உயிரின மோதல்களை தவிர்க்க வழங்கப்படும் நிவாரண நிதியிலிருந்து வசந்தா அவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்பட உள்ளது.


இந்தத் தொகையில் முதற்கட்டமாக ரூ. 50,000/- கான காசோலையினை மாவட்ட வன அலுவலர் கலாநிதி, இ.வ.ப. அவர்கள் இன்று (3108,2023) மரணமடைந்த திருமதி வசந்தா அவர்களின் குடும்பத்தாரிடம் வழங்கினார். மீதமுள்ள ரூ.4,50,000/- விரைவில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.



வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad