இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் போலீசார் சோதனை இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் 1 நபர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 17 அக்டோபர், 2023

இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் போலீசார் சோதனை இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் 1 நபர் கைது.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக இராஜபாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ப்ரீத்திக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அடிப்படையில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு  போது, சேத்தூர் ஊரக காவல் நிலையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த  கருப்பையா மகன் கன்னியராஜ்  (வயது30 ) என்ற வாலிபரை சோதனை செய்து பார்த்தபோது 50 கிராம் கஞ்சா வைத்துள்ளார். 


தொடர்ந்த, அவரிடம்  விசாரணை செய்த பொழுது முன்னுக்கு பின் முரணாக பேசி வந்த நிலையில் அவரது வீட்டிற்கு சென்று ஆய்வாளர் அனந்தகுமார் தலைமையில் போலீசார் சோதனை செய்தபோது,  விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.  கன்னியராஜ் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்ததாக இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


தொடர்ந்து, இது போன்ற குற்றங்கள் ஈடுபட்டால் குண்டாஸ் சட்டம் போடப்படும் என காவல்துறை எச்சரித்தனர். கன்னியராஜ்க்கு யாருடன் தொடர் உள்ளது என்பதை  குறித்தும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரீத்தி தீவிர விசாரணை செய்ய காவல்துறைக்கு  உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad