மதுரையில் காப்பகத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து சிறுவன் பலியானான். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 10 அக்டோபர், 2023

மதுரையில் காப்பகத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து சிறுவன் பலியானான்.

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சிட்டம்பட்டி அருகே உள்ள கத்தப்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். கட்டிட தொழிலாளியான இவருக்கு ராமர், லட்சுமணன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.


இவர்களுக்கு பேசும் திறன் குறைந்திருந்தது. இதன் காரணமாக 2 மகன்களையும் மதுைர டி.ஆர்.ஓ. காலனியில் உள்ள மனநலம் குன்றியோர் காப்பகத்தில் மீனாட்சி சுந்தரம் சேர்த்தார். அங்கு காப்பக ஊழியர்கள் 2 பேரையும் பராமரித்து வந்தனர்.


இந்த நிலையில் சம்பவத் தன்று காப்பகத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து லட்சுமணன் இறந்து விட்டதாக தந்தை மீனாட்சி சுந்தரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவ இடத்திற்கு வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் தொடர்பாக மீனாட்சி சுந்தரம் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதில் காப்பக நிர்வாகத்தில் கவனக்குறைவு தான் தன் மகன் சாவிற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.


தண்ணீர் தொட்டியை மூடாமல் காப்பக நிர்வாகிகள் அலட்சியமாக இருந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad