காயரம்பேடு கூட்ரோட்டில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம். முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 அக்டோபர், 2023

காயரம்பேடு கூட்ரோட்டில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம். முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் பங்கேற்பு.

காயரம்பேடு கூட்ரோட்டில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் பங்கேற்றார். செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் காயரம்பேடு மற்றும் கல்வாய் ஆகிய ஊராட்சிகளில் உள்ள நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி கூட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு கூட்ரோட்டில் நேற்று நடைபெற்றது. 


இதில் கிழக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதியும், காயரம்பேடு ஊராட்சி மன்ற துணை தலைவருமான ஜி.திருவாக்கு தலைமை தாங்கினார். ஒன்றிய அவை தலைவர் தேவராஜன், துணை செயலாளர் ஜெயராமன், கல்வாய் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மாலாபரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் இ.சம்பத்குமார் அனைவரையும் வரவேற்றார். 


சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி எம்பியுமான சிட்லபாக்கம் ராஜேந்திரன், மறைமலைநகர் நகர மன்ற முன்னாள் தலைவரும், அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான எம்.ஜி.கே.கோபிகண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு காயரம்பேடு மற்றும் கால்வாய் ஆகிய ஊராட்சிகளில் உள்ள நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி கூட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad