கீழாந்துரை ஊராட்சி கிராம சபை கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 அக்டோபர், 2023

கீழாந்துரை ஊராட்சி கிராம சபை கூட்டம்

நெமிலி ஊராட்சி ஒன்றியம் கீழாந்துரை ஊராட்சி கிராம சபை கூட்டம் கீழாந்துரை ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில், வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதாக, கிராம சபைக் கூட்டத்தில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர், பெ.வடிவேலு தகவல் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கீழாந்துரை ஊராட்சியில், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர், மின்னல் ஒலி அம்பேத்ராஜ்  தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர், பெ.வடிவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கிராம சபையின் நோக்கம் குறித்தும், தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும் விளக்கிப் பேசினார்!.


மேலும் கீழாந்துரை ஊராட்சியில் ரூ.14 இலட்சம்  ஆதிதிராவிடர் காலனி பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி ரூ.33 இலட்சம் மதிப்பீட்டில், கீழாந்துரை கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில், ஆதிதிராவிடர் காலனி பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில், தாட்கோ காலனி பகுதியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ரூ.1.88 கோடி மதிப்பீட்டில், கீழாந்துரை முதல் தேவதானம் வரை செல்லும் சாலை,  தமிழ்நாடு முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாடு செய்யும் திட்டத்தின் கீழ் தார் சாலையாக மேம்பாடு செய்யும் பணி ரூ.7.5 இலட்சம் மதிப்பீட்டில், கீழாந்துரை கிராமத்தில் பள்ளிக் கட்டிடங்கள் பழுதுபார்த்தல் பணி ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில், கீழாந்துரை கிராமத்தில் 2 தானிய நெற்களம் அமைக்கும் பணி ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில், கீழாந்துரை கிராமத்தில் பள்ளிக் கழிவறை அமைக்கும் பணி ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில், கீழாந்துரை கிராமத்தில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் மொத்தம் ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருவதாக ஒன்றிய பெருந்தலைவர் கூட்டத்தில் தெரிவித்தார்.


இக்கூட்டத்தில், நெமிலி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ச.தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், இரவி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சுகாதார செவிலியர், ஆசிரியர்கள், கலைஞர்தாசன் உள்ளிட்ட கழகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad