செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரும் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு கே ஜே நகரில் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 28 லட்சம் மதிப்பில் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் எம் கே டி கார்த்திக் துணைத் தலைவர் ஜிகே லோகநாதன் நகராட்சி பொறியாளர் வெங்கடேசன் நகராட்சி ஆணையர் தாமோதரன் மற்றும் திட்ட இயக்குனர் பாஸ்கரன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
மேலும் எம் கே டி சரவணன் ஒன்பதாவது வார்டு திமுக செயலாளர் ஜினோ அவைத்தலைவர் கணேசன் இளைஞரணி நிர்வாகிகள் ஆர் எம் பி.பிரபு ரவி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக