திருச்செந்தூர் அருகே பழிக்கு பழியாக பட்டப்பகலில் பைக்கில் எதிரே வந்த வியாபாரியை கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வன்னிமாநகரத்தை சேர்ந்தவர் ஜெயபாண்டி மகன் வேம்படிதுரை(40). இவர் சேலத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது உறவினர் இறப்பிற்கு சொந்த ஊரான வன்னிமாநகரத்திற்கு வந்துள்ளார். உறவினர் உடல் அடக்கம் முடிந்த பிறகு வன்னிமாநகரம் வள்ளிவிளை ரோட்டோரத்தில் உள்ள தோட்டத்தில் குளித்து விட்டு பைக்கில் வீடு திரும்பியுள்ளார். அப்போது எதிரே வந்த கார் வேம்படித்துரை பைக் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட நிலையில் வேம்படித்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் சாலையோரம் கிடந்த மணலில் கார் புதைந்து சரிந்த கிடந்தது. இதனால் காரை எடுக்க முடியாமல் அதில் வந்தவர்கள் திணறியுள்ளனர். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் தாலூகா போலீசார் விரைந்து வந்தனர். இதனை கண்டதும் காரில் வந்தவர்கள் அப்படியே விட்டு விட்டு தோட்டம் வழியாக தப்பிச் சென்றனர். இதனையடுத்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் விசாரணை நடத்தினார். விசாரணையில் 5 பேர் கொண்ட மர்மநபர்கள் வேம்படிதுரை பைக் மீது ஏற்றிய கொலை செய்தது தெரியவந்தது. வேம்படிதுரை உடலைக் கைப்பற்றிய போலீசார் திருச்செந்துர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வன்னிமாநகரத்தில் உள்ள கோயில் கொடைவிழாவில் ஏற்பட்டு பிரச்சனையில் கடந்த 2016-ம் ஆண்டு விவசாயி சிவகுரு(எ)சிவலட்சம் என்பவரை கொலை செய்த வழக்கில் வேம்படிதுரை உள்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதனால் கொலை செய்யப்பட்ட சிவகுரு(எ) சிவலட்சம் உறவினர்கள் அவரது ஆதரவாளர்கள் பழிக்கு பழியாக வேம்படிதுரை கொலை செய்து தெரியவந்துள்ளது.
இதுத்தொடர்பாக திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டபகலில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக