திருச்செந்தூர் - கந்த சஷ்டி திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 நவம்பர், 2023

திருச்செந்தூர் - கந்த சஷ்டி திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் ஆய்வு.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் ஆய்வு.


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இவ்வாண்டு வருகின்ற 13.11.2023 அன்று தொடங்கி 19.11.2023 அன்று வரை கந்த சஷ்டி திருவிழா நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய திருவிழா நாட்களான 18.11.2023 அன்று சூரசம்கார நிகழ்வும், 19.11.2023 அன்று திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.


இந்த கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் (04.11.2023) அன்று திருச்செந்தூர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்களுக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் தர்மர், திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளர் கணேச மணிகண்டன் உட்பட காவல்துறையினர் மற்றும் திருச்செந்தூர் கோவில் உதவி பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad