திருமறையூரில் பிளாஸ்டிக் இல்லாத கிரீன் கிறிஸ்மஸ் அலங்கார பொருட்கள் செய்முறை பயிற்சி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 19 நவம்பர், 2023

திருமறையூரில் பிளாஸ்டிக் இல்லாத கிரீன் கிறிஸ்மஸ் அலங்கார பொருட்கள் செய்முறை பயிற்சி.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத், CSI - தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத் துறையின் சார்பாக பனையோலையில் கிறிஸ்மஸ் அலங்கார பொருட்கள் செய்யும் பயிற்சி திருமறையூர் வளாகத்தில் நடைபெற்றது. 



கிறிஸ்மஸ் மரம், நட்சத்திரங்கள், அலங்கார மாலை செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்வினை திருமறையூர் சேகர குருவானவர் அருள்திரு. H. ஜான் சாமுவேல் தொடங்கி வைத்தார். திருமதி. டயானா அவர்கள் பயிற்சி அளித்தார். 


இந்நிகழ்ச்சியில் திருமறையூர் சபை ஊழியர் ஸ்டான்லி ஜான்சன் துரை, ஆசிரியை கோல்டா, ஆலய பணியாளர் ஆபிரகாம் மற்றும் சேகர கமிற்றி உறுப்பினர்கள் கலந்துக் கொண்டார்கள். நாசரேத், திருமறையூர் மற்றும் அருகில் உள்ள கிராமங்களிலிருந்து அநேகர் உற்சாகமாக பங்குபெற்று பயனடைந்தனர். 


இதன் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில் பிளாஸ்டிக் இல்லாத பண்டிகையை கொண்டாடும் படியாகவும், பனையோலை பொருட்களின் முக்கியத்துவத்தைக் கூட்டும் படியாகவும் இந்நிகழ்வை நடத்துகிறோம் என்று கூறினார். இந்நிகழ்ச்சியை திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனை துறை இயக்குநர் ஜான் சாமுவேல் செய்திருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/