தூத்துக்குடி மாவட்டம், ஜன.10, மாவட்டத்தில் நேற்று 09.01.24 காலை 8.30 முதல் இன்று 10.01.24 காலை 8.30 வரை வானிலை மையம் அறிவிக்கையின் படி தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது, குறிப்பாக காயல்பட்டினம் பகுதியில் அதிகப்படியாக 26 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
குறைந்தபட்ச அளவாக இரண்டு மில்லி மீட்டர் மழை கயத்தாறு மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் பெய்த மொத்த மழையின் அளவு 142.50 மில்லி மீட்டர் எனவும் தோராயமாக 7.50 மில்லி மீட்டர் என பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த மழை தென் மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் ஓரிரு நாட்கள் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழை நேரங்களில் மின்சாதனங்களை பாதுகாப்புடன் கையாள மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக