விளாத்திகுளம் - விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த எதிரி கைது - 10 கிராம் கஞ்சா பறிமுதல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 ஜனவரி, 2024

விளாத்திகுளம் - விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த எதிரி கைது - 10 கிராம் கஞ்சா பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம், ஜன.16, மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த எதிரி கைது - 10 கிராம் கஞ்சா பறிமுதல்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வெங்கடேஷ் மேற்பார்வையில் மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் விநாயகம் மற்றும் போலீசார் நேற்று (15.01.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாப்பாத்தி அகதிகள் முகாம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் அதே பகுதியை சேர்ந்த கனகரத்தினம் மகன் விஜயராஜன் (40) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.


உடனே மேற்படி போலீசார் எதிரி விஜயராஜனை கைது செய்து அவரிடமிருந்த 10 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad