தூத்துக்குடி மாவட்டம் : 10.01.2024, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பசுபதிபாண்டியன் 12வது நினைவு தினத்தையொட்டி, காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் நேரில் சென்று கண்காணிப்பு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலங்காரத்தட்டில் நேற்று (10.01.2024) பசுபதிபாண்டியன் நினைவிடத்தில் 12வது ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீசாரின் ரோந்துப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. போலீசாரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆங்காங்கே நேரில் சென்று கண்காணித்து ஆய்வு செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக