தமிழக காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில செயலாளர். ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 12 ஜனவரி, 2024

தமிழக காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில செயலாளர். ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை.

ஜனநாயக மதச்சார்பற்ற என்று போற்றப்படும் இந்தியாவில் ராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டப்பட்டு வருகிற 22-ம் தேதி திறப்பு விழா நடைபெற்று ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறுகிறது.ஏதோ பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்பது போல பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.இந்திய பிரதமரும் ஏதோ தங்கள் வீட்டில் விழா நடப்பது போல அழைப்பு விடுத்து வருகிறார்.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாழும் இந்திய மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்களாக ஒற்றுமையாக பழகி வருகிறார்கள். மதச்சார் பின்மையையும் ஜனநாயகத்தையும் போற்றி பாதுகாத்தும் வருகிறார்கள்.எனவே ராமர் கோயில் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் சொந்தம் என்பதால் வருகிற 22ம் தேதி நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ராமர் பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருந்து புறப்பட்டு தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் தலைமையில் ஐம்பது பேர் நேரடியாக அயோத்தி சென்று ராமரை வணங்கி வழிபட உள்ளோம்.மேலும் இந்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மத தலைவர்களையும் எதிர்க்கட்சி  தலைவர்களையும் தவிர்க்காமல் விருப்பு வெருப்பு இல்லாமல் இந்த நல்ல நிகழ்ச்சியில் கலந்து முறையான அழைப்பு கொடுத்து கலந்து கொள்ள செய்ய வேண்டும். எனவும் தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad