திருநங்கைகளுக்கு ஓட்டுநர் பயிற்சி அளித்து அவர்களை வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த "ஓட்டுநர் பயிற்சி வாகனம்" வழங்கி சமூக சேவை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 12 ஜனவரி, 2024

திருநங்கைகளுக்கு ஓட்டுநர் பயிற்சி அளித்து அவர்களை வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த "ஓட்டுநர் பயிற்சி வாகனம்" வழங்கி சமூக சேவை.

தூத்துக்குடி மாவட்டம், ஜன.11, நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் புது வாழ்வு சங்கம் சார்பில் அறக்கட்டளை நிறுவனமான புதுவாழ்வு சங்கம் சார்பில் அறக்கட்டளையின் அறங்காவலர் டாக்டர் அன்பு ராஜன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் முன்னிலையில் திருநங்கை சுபப்பிரியாவுக்கு ஓட்டுநர் பயிற்சி வாகனத்தை நன்கொடையாக வழங்கினார். 




இந்த பயிற்சி வாகனம் மூலம் திருநங்கைகளுக்கும் ஏழை எளிய பெண்களுக்கும் ஓட்டுநர் பயிற்சி வழங்கி அவர்களுக்கு மாநகராட்சி மற்றும் பல்வேறு நிறுவனங்களில் ஓட்டுநர் பயிற்சி பணிக்கு வேலை வாய்ப்பு பெற்று தர உதவி செய்து அவர்களை வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல இந்த நற்பணியை செய்வதாகவும் இதன் மூலம் வாழ்க்கையின் அடித்தட்டில் தனது சொந்த குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகள் முன்னேறி அவர்களும் வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு வர ஏதுவாக இருக்கும் எனவும் இதுபோன்று திருநங்கைகளுக்கும் ஏழை எளிய பெண்களுக்கும் தொழில் தொடங்க பல்வேறு உதவிகளை தூத்துக்குடியில் உள்ள பல்வேறு நிறுவனங்களும் இதுபோன்று செய்ய வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.




மேலும் இதுபோன்று திருநங்கைகளுக்கு கடந்த 15 வருடங்களாக பல்வேறு நலத்திட்டங்கள் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் புது வாழ்வு சங்கத்தின் சார்பில் செய்து வருவதாகவும் அறங்காவலர் டாக்டர் அன்பு ராஜன் தெரிவித்தார்.




இந்த உதவியை பெற்றுக் கொண்ட திருநங்கை சுபப்பிரியா தான் ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக மின்சார உறுதி இயக்கும் பணியாளராக பணியாற்றி  வருகின்றேன் தற்போது என்னை போன்ற திருநங்கைகள் வாழ்வில் உயர்வதற்கு அவர்களும் என்னை போன்று ஓட்டுனர்களாகி பல்வேறு பணிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உதவியை நாலுமாவடி ஏசு விடுகிறார் ஊழிய நிறுவனத்திடம் கேட்டேன் அவர்கள் தற்போது எனக்கு இந்த வாகனத்தை தந்துள்ளார்கள் இதன் மூலம் என்னைப் போன்ற திருநங்கைகளுக்கு ஓட்டுனர் பயிற்சி அளித்து அவர்களை மாநகராட்சி மற்றும் பல்வேறு பணி இடங்களுக்கு பணி செய்ய உதவிகள் வாங்கிக் கொடுப்பேன் எனவும் இதன் மூலம் என்னைப் போன்ற திருநங்கைகள் வாழ்வில் உயர வழிவகை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.




இந்த பயிற்சி வாகனத்தின் சாவியை  புதுவாழ்வு சங்கத்தின் அறங்காவலர் டாக்டர் அன்புராஜன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் திருநங்கை சுபப்பிரியாவிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் செய்தி தொடர்பு அலுவலர் ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் உட்பட பலர் உடன் இருந்தனர். 




நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் மேலாளர் செல்வகுமார் சிறப்பாக செய்திருந்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad