திருமறையூர் - திருமண்டல அளவிலான ஓய்வு பெற்ற குருவானவர்களுக்கான புத்தாண்டு சிறப்பு கூடுகை நிகழ்ச்சி நடந்தது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 12 ஜனவரி, 2024

திருமறையூர் - திருமண்டல அளவிலான ஓய்வு பெற்ற குருவானவர்களுக்கான புத்தாண்டு சிறப்பு கூடுகை நிகழ்ச்சி நடந்தது.

நாசரேத் _ திருமறையூர் மறுரூப ஆலயத்தில் தூத்துக்குடி _ திருமண்டல அளவிலான ஓய்வு பெற்ற குருவானவர்களுக்கான புத்தாண்டு சிறப்பு கூடுகை நிகழ்ச்சி நடந்தது.




தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலத்தில் உள்ள ஓய்வு பெற்ற குருவானவர்களுக்கான  புத்தாண்டு  ஆசீர்வாத சிறப்பு கூடுகை நிகழ்ச்சி  நாசரேத் அருகே உள்ள திருமறையூர் மறுரூப ஆலயத்தில் நடந்தது. தூத்துக்குடி நாசரேத் திருமண்டல முதல்  பேராயர்  ஜெபச்சந்திரன் தலைமை வகித்தார்.




ஓய்வு பெற்ற குருமார்கள் பொறுப்பாளர்கள் ஜெரேமியா,  பொன்னுசாமி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். குருவானவர் ஜேசன் செல்வக்குமார் தேவசெய்தி கொடுத்தார். பாடல் வேலையை குருவானவர் இர்வின் சார்லஸ் மற்றும் ஜேசன் செல்வக்குமார் பொறுப்பெடுத்துக்கொண்டனர். தேசத்தின் நலனுக்காகவும், திருமண்டலத்தின் வளர்ச்சிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. திருமண்டலத்தில்  30க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற குருவானவர்கள் கலந்து கொண்டனர். கூடுகையில் பங்கேற்ற   அனைத்து குருவானவர்களுக்கும்  மறுரூப ஆலயத்தின் சார்பில்  நினைவு பரிசு  மற்றும் அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டன.




ஏற்பாடுகளை திருமறையூர் மறுரூப ஆலய சேகர தலைவரும், திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறை  இயக்குனருமான  ஜாண் சாமுவேல்  மற்றும் சேகர கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad