திருநெல்வேலி - 7வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 பிப்ரவரி, 2024

திருநெல்வேலி - 7வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா.

திருநெல்வேலி மாவட்டம், பிப்.03, நெல்லையில் புத்தக திருவிழா.


பிப்ரவரி 3 முதல் 13ஆம் தேதி வரை 7வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தகம் மையம் - டவுன் பொருட்காட்சி திடலில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.


மாவட்டத்தின் அனைத்து பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் பணியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் திரளாக புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கிச் செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.


தமிழகத்தின் பிற புத்தக கண்காட்சிகளைவிடவும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரக்கூடிய திருவிழாவாக 7-வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா அமையும்.


இந்த நல்வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு புத்தகங்கள் வாங்கி, நம் புத்தகத் திருவிழாவினை பெருவெற்றி அடைய செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கேட்டு கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad