கிருங்காகோட்டையில் ரூ.967.46 இலட்சங்கள் மதிப்பீட்டில் "நாட்டார் கால்வாய் புனரமைக்கும் பணியை" துவக்கி வைத்த அமைச்சர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

கிருங்காகோட்டையில் ரூ.967.46 இலட்சங்கள் மதிப்பீட்டில் "நாட்டார் கால்வாய் புனரமைக்கும் பணியை" துவக்கி வைத்த அமைச்சர்.

தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் கிருங்காகோட்டையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் தலைமையிலும், முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசி ரவிக்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் ஆகியோரின் முன்னிலையிலும் சுமார் ரூ.967.46 இலட்சங்கள் மதிப்பீட்டு தொகையில் "நாட்டார் கால்வாய் புனரமைக்கும் பணியின் துவக்க விழா" நடைபெற்றது.



இத்திட்டத்தின் மூலமாக நாட்டார் கால்வாயினை சீரமைத்து புதிய தலைமதகுகள் கட்டி சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்திலுள்ள 17கண்மாய்களுக்கும், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டத்திலுள்ள 3 கண்மாய்களுக்கும், விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டத்திலுள்ள 1 கண்மாய்க்கும் தண்ணீர் வழங்கும் பணி துவங்கப்பட உள்ளது.



நாட்டார் கால்வாய் திட்டமானது வெள்ளங்காலங்களில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது வெள்ள உபரி நீரை சிவகங்கை மாவட்டத்திலுள்ள 17கண்மாய்களுக்கும், இராமநாதபுர மாவட்டத்திலுள்ள 3கண்மாய்களுக்கும், விருதுநகர் மாவட்டத்திலுள்ள 1 கண்மாய்க்கும் வழங்க 1999-2000ம் ஆண்டில் அரசாணை எண் : 197/ பொதுப்பணி (P1) துறை / நாள் : 21.05.1999 ம் மூலம் 309.00 இலட்சங்களுக்கு 2000-2001ம் ஆண்டில் செயல் படுத்தப்பட்ட திட்டமாகும்.



நாட்டார் கால்வாயானது விரகனூர் மதகு அணையின் வலது பிரதான கால்வாய் நெடுகை 33,900 மீட்டரிலிருந்து துவங்கி கிருங்காக்கோட்டை கிராமம் வழியாக இராஜகம்பீரம் கண்மாய்க்கு செல்கிறது. இராஜகம்பீரம் கண்மாயிலிருந்து தீத்தான்பேட்டை, அன்னவாசல், அரிமண்டபம், கரிசல்குளம், சோமாத்தூர் கிராமங்கள் வழியாக கள்ளிக்குடி மற்றும் புத்தூர் ஆகிய கண்மாய்களுக்கு சென்றடைகிறது. இந்த கால்வாயின் நீளம் சுமார் 33.20 கிலோ மீட்டர் ஆகும். இந்த கால்வாய் மூலம் இராஜகம்பீரம், அன்னவாசல், கிளாங்காட்டூர், அரிமண்டபம், நெடுங்குளம், மானங்காத்தான், புலிக்குளம், சோமாத்தூர், எம்.கரிசல்குளம், எஸ். கரிசல்குளம், கட்டிக்கனேந்தல், புத்தூர், கள்ளிக்குடி, பாப்பன் கண்மாய், வாகைக்குளம், மேலமேல்குடி, தீயனூர், மங்கியேந்தல், பூவனேந்தல், சேதுராயனேந்தல், மற்றும் வேலாநேரி ஆகிய 21 கண்மாய்கள் பயன்பெறுகின்றன. இக்கண்மாய்கள் மூலம் சுமார் 1430.22 ஹெக்டேர் (3532.64 ஏக்கர்) பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன.
நாட்டார் கால்வாயை தூர்வாரி சீரமைத்து, கால்வாய் பிரிவு முகப்புகளில் 6 தலைமதகுகள் புதிதாக கட்டி மேற்கண்ட கண்மாய்களுக்கு வெள்ளக் காலங்களில் முறையாக தண்ணீர் வழங்க தமிழக அரசால் அரசாணை எண்: 31/ நீர்வளம் (S2) துறை நாள் : 22.09.2023 மூலம் ரூ.967.46 இலட்சங்களுக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு இத்திட்டம் இவ்வாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், நகர செயலாளர் பொன்னுசாமி, நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட வருவாய் அலுவலர் மோகன சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, ஒன்றிய துணை பெருந்தலைவர் முத்துசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாமணி, மாவட்ட நகர ஒன்றிய பேரூர் ஊராட்சி திமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/