நாசரேத்தில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவினை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பேரூராட்சியில் 15வது நிதிக் குழு திட்டத்தின் கீழ் ரூபாய் பத்து லட்சம் மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பேரூராட்சி தலைவர் நிர்மலா தலைமை வகித்தார். செயல் அலுவலர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். பூங்காவினை தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரி சங்கர், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் இராமஜெயம், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவீன் குமார், நாசரேத் நகர செயலாளர் ஜமீன் சாலமோன், பேரூராட்சி துணைத் தலைவர் அருண் சாமுவேல் என்ற தம்பு, பேரூராட்சி கவுன்சிலர்கள் பத்திரகாளி, அனி சாலமோன், சௌந்தரம், ஐஜினஸ் குமார், ஜேம்ஸ், ரதிசந்திரன், ஜெயா, ஸ்டெல்லா, எபனேசர் சாமுவேல், பெனிற்ரோ, அதிசயமணி, லீதியாள் கிளாரா, வழக்கறிஞர் கிருபாகரன், கபடி கந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக