சீட் கொடுக்க கூடாது, கார்த்தி ப. சிதம்பரம் மீது நடவடிக்கை தேவை, சிவகங்கையில் காங்கிரஸார் தீர்மானம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

சீட் கொடுக்க கூடாது, கார்த்தி ப. சிதம்பரம் மீது நடவடிக்கை தேவை, சிவகங்கையில் காங்கிரஸார் தீர்மானம்.

சிவகங்கையில் நடைபெற்ற வேறொரு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் தற்போதைய சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கார்த்தி ப. சிதம்பரம் அவர்களுக்கு சீட் கொடுக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சீட் கொடுத்தாலும் தாங்கள் தேர்தல் பணி வேலைகளில் ஈடுபட போவதில்லை என்பது போன்ற தங்கள் அதிருப்திகளை வெளிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து தங்களின் அதிகாரப்பூர்வ தீர்மானம் பதில்களையும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பிரதமர் மோடி அவர்களுக்கு ஆதரவாகவும் ராகுல் காந்தி அவர்களுக்கு எதிராகவும் பேசிய கார்த்திக் சிதம்பரம் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ராமசாமி முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி மாவட்ட நகர வட்டார பேரூர் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad