திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 17 பிப்ரவரி, 2024

திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.


சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள் கூட்டம், ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்.ஏ., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைத் தலைவர்,  வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் முன்னிலை வகித்தார். 


மேலும் இக்கூட்டத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடுதல். 27.02.2024 அன்று திமுக இளைஞர் அணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை சிறப்பாக நடத்துதல். 2024-நாடாளுமன்ற தேர்தல் பணியினை ஆதிதிராவிட நல்குழு நிர்வாகிகள் சிறப்பாக செயலாற்றுதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/