ஸ்ரீவைகுண்டம் - ஊராட்சி ஒன்றியத்தில் இந்திய தர நிர்ணய பயிற்சி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 பிப்ரவரி, 2024

ஸ்ரீவைகுண்டம் - ஊராட்சி ஒன்றியத்தில் இந்திய தர நிர்ணய பயிற்சி.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம். பிப். 13, இந்திய அரசின் தர நிர்ணய  அமைவனம் சார்பாக ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி நடைபெற்றது. 


ஊராட்சி ஒன்றிய பகுதி கிராம பஞ்சாயத்தில் விற்கப்படும் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும்.  இந்திய தர நிர்ணய அமைவனம் பயிற்சியாளர் பழனி ISI முத்திரை இருந்தாலும் தயாரிக்கப் படும் பொருட்கள் அளவு மற்றும் தரம் பற்றி ஆன் லைன் ஆஃப் மூலம் சரிபார்த்து தகவல் தெரிந்து கொள்ளலாம் என்றும்,  இது போன்று தங்கம் தரக்கட்டுப்பாடு பற்றியும் பயிற்சி அளித்தார். 


இந்நிகழ்ச்சியில்    வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி ஒன்றியம்) சிவராஜன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ( ஊராட்சி) ராஜேஷ் வரவேற்றார். முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாச்சாரி உட்பட ஊராட்சி மன்ற  தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad