துபாயில் ரோவர்ஸ் அமைப்பு சார்பில் நடைபெற்ற சர்வதேச மாணவ, மாணவிகள் ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு போட்டி !!! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 12 பிப்ரவரி, 2024

துபாயில் ரோவர்ஸ் அமைப்பு சார்பில் நடைபெற்ற சர்வதேச மாணவ, மாணவிகள் ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு போட்டி !!!

 


துபாயில் ரோவர்ஸ் அமைப்பு சார்பில்  நடைபெற்ற சர்வதேச மாணவ,  மாணவிகள் ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு போட்டி !!!

துபாய்  - ஐக்கிய அரபு அமீரக துபாயில் உள்ள தநூப்  ஸ்போர்ட்ஸ்   விளையாட்டு உள்ளரங்கில் ரோவர்ஸ் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தும் நிறுவனம்  சார்பில் சர்வதேச மாணவ மாணவிகளின்  கராத்தே மற்றும் (இறகு பந்து) பேட் மிட்டன்  விளையாட்டு போட்டிகள்  துபாயில்  பிரபலமான கேப்டன் தொலைக்காட்சி  புதுகை ஸ்டார் தொலைக்காட்சி தமிழக குரல் நாளிதழ் வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல் மற்றும் தமிழகத்தில் இருந்து வந்திருந்த கராத்தே கார்த்திக்  முதன்மை விருந்தினராக கலந்துகொள்ள சிறப்பாக  நடைபெற்றது.

இவ்வறங்கில் போட்டிகள் நடைபெற்று  வெற்றிபெற்ற  மாணவ மாணவிகளுக்கு வெற்றி கோப்பைகள் மற்றும்  பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக துபாயில் உள்ள பிரபலங்களான துபாய் முத்தமிழ் சங்க நிர்வாகிகளான தொழிலதிபர்  ரமேஷ், கள்ளக்குறிச்சி சின்னா, தொழிலதிபர் ஜான்சி, ரேடியோ கில்லி எப்எம் ஆர்ஜே ரோஸ், துபாய் புல்லிங்கோ டிக்டாக் ஷனாவஸ், தினகுரல் நாளிதழ் முதன்மை நிருபர் மற்றும் வணக்கம் பாரதம் வாரஇதழ் இணை ஆசிரியர் நஜீம் மரிக்கா மற்றும் விளையாட்டு ஆர்வலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். 


மேலும் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரோவெர்ஸ்  CEO - ஜீலனி  சுபஹான் தலைமையில் பர்வின், மதுசூதனனன், ஜப்பார், மணிகண்டன், தாரிக் அலி, ஐயப்பன் ஆகியோர்  ஒருங்கிணைப்பில்  வெற்றி பெற்றவர்களுக்கு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர்கள், சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்டோர்   சான்றிதழ் மற்றும் பதக்கங்கள்  வழங்கி கௌரவித்தனர்.


மேலும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கப்படுத்தும் அறிவுரைகள், எடுத்துக்காட்டுகள் கூறி சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த  கேப்டன் டிவி மற்றும் புதுகை ஸ்டார் நியூஸ் , தமிழக குரல் இணைய தளம் செய்திகள், வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல்  , ஆர் ஜே ரோஸ், புல்லிங்கோ ஷாநவாஸ், தினகுரல் நஜீம் மரிக்கா மற்றும் விளையாட்டு ஆர்வலர்  ஆகியோர் வாழ்த்துக்கள் கூறி சிறப்புரையாற்றினர்.


இந்நிகழ்விற்கு வந்திருந்த போட்டியாளர்களின் பெற்றோர்கள் ஆனந்தக் கண்ணீர் மல்க நன்றிகளோடு வாழ்த்துக்கள் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது. 



தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/