இலையூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பக்தர்கள் பதினெட்டாம் ஆண்டு சமயபுரம் பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி, - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

இலையூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பக்தர்கள் பதினெட்டாம் ஆண்டு சமயபுரம் பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி,


அரியலூர் மாவட்டம் இலையூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பக்தர்கள் பதினெட்டாம் ஆண்டு சமயபுரம் பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் பக்தர்கள் ஆண்டுதோறும் பால் குடம் எடுத்து வழிபாடு செய்து சமயபுரம் மாரியம்மன் தரிசிக்க நடந்து செல்வது வழக்கம்.


இதனையொட்டி இன்று பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, பூங்கரகம், அம்மன் ஆட்டம், பம்பை உடுக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திருக்குளம்  ஏரியிலிருந்து கரகம் ஜோடிக்கப்பட்டு பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் கரகம் அக்னி சட்டி முக்கிய வீதிகள் வழியாக சுமந்து வந்து கோவிலை அடைந்தனர்‌. இதனையடுத்து அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.


இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் வருகின்ற 28ஆம் தேதி இலையூர் கிராமமக்கள் மாலை அணிந்து கொண்டவர்கள் சமயபுரம் நோக்கி நடைபயணம் செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/