தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி கனிமம் எடுத்த 11 சேம்பர் உரிமையாளர்களுக்கு அபராதம் – கலெக்டர் அறிவிப்பு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 மார்ச், 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி கனிமம் எடுத்த 11 சேம்பர் உரிமையாளர்களுக்கு அபராதம் – கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், மார்ச் 08, ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் அனுமதியின்றி கனிமம் எடுத்தது தொடர்பாக 1959-ம் ஆண்டு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளின் படி,


1) ஆழ்வார்தோப்பு கிராமம், அக்னி சேம்பர் உரிமையாளர் ரவிநாராயணன் என்பவர் 90/28, 90/2A, 2/9B, 2/8B2, 2/8B1, 2/ 8A. 2/8B3, 2/A ஆகிய புல எண் கொண்ட நிலங்களில் அரசு அனுமதியின்றி குவித்து வைக்கப்பட்டுள்ள 93,083 க.மீ கனிமத்திற்கான அபராதம் ரூ.1,65,68,774/-


2) திருக்களூர் கிராமம், சக்தி சேம்பர் உரிமையாளர் பாஸ்கரன் என்பவர் ஸ்ரீபராங்குசநல்லூர் கிராமம் புல எண்கள். 74/5A மற்றும் 74/5B-ல் அரசு அனுமதியின்றி இருப்பு வைக்கப்பட்டது மற்றும் புல எண்கள். 96/15, 96/20, 96/25 ஆகிய பட்டா நிலங்களில் அரசு அனுமதியின்றி எடுக்கப்பட்ட 9,840 க.மீ கனிமத்திற்கான அபராதம் ரூ.17,51,520/-


3) ஏரல், உமா சேம்பர் உரிமையாளர் சபாபதி என்பவர் ஸ்ரீபராங்குசநல்லூர் கிராமம் புல எண்கள். 63/21, 63/33 ஆகிய பட்டா நிலங்களில் அரசு அனுமதியின்றி எடுக்கப்பட்ட 7,660 க.மீ கனிமத்திற்கான அபராதம் ரூ.13,63,480/-


4) ஆழ்வார்தோப்பு கிராமம், SKS சேம்பர் உரிமையாளர் லிங்கமுனீஸ்வரன் என்பவர் ஸ்ரீபரங்குசநல்லூர் கிராமம் புல எண்கள். 5/10, 5/18A, 5/21 ஆகிய பட்டா நிலங்களில் அரசு அனுமதியின்றி குவித்து வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட 10,622 க.மீ கனிமத்திற்கான அபராதம் ரூ.18,90,716/-


5) மாவடிபண்ணை, சீனிவாசன் சேம்பர் உரிமையாளர் சீனிவாசன் என்பவர் ஸ்ரீபராங்குசநல்லூர் கிராமம்,56 , 59/40, 59/20 ஆகிய பட்டா நிலங்களில் அரசு அனுமதியின்றி எடுக்கப்பட்ட 3,348 க.மீ கனிமத்திற்கான அபராதம் ரூ.5,95,944/-


6) ஆழ்வார்தோப்பு கிராமம், ஸ்ரீஜெயராம் பிரிக்ஸ் உரிமையாளர் பாலமகேஷ் என்பவர் ஸ்ரீபராங்குசநல்லூர் கிராமம் புல எண். 64/44-ல் அரசு அனுமதியின்றி எடுக்கப்பட்ட 2,250 க.மீ கனிமத்திற்கான அபராதம் ரூ.2,83,500/-


7) ஆழ்வார்தோப்பு கிராமம், KPM பிரிக்ஸ் உரிமையாளர் மாரிநாதன் என்பவர் ஸ்ரீபராங்குசநல்லூர் கிராமம் புல எண். 37/8-ல் அரசு அனுமதியின்றி எடுக்கப்பட்ட 3,100 க.மீ கனிமத்திற்கான அபராதம் ரூ.3,90,600/-


8) ஆழ்வார்தோப்பு கிராமம், ஆதித்யா பிரிக்ஸ் உரிமையாளர் லிங்கேஸ்வரன் என்பவர் ஸ்ரீபராங்குசநல்லூர் கிராமம் புல எண். 64/8, 64/11, 64/12, 64/13 ஆகிய பட்டா நிலங்களில் அரசு அனுமதியின்றி எடுக்கப்பட்ட 4,875 க.மீ கனிமத்திற்கான அபராதம் ரூ.6,14,250/-


9) ஆழ்வார்தோப்பு கிராமம், பாலாஜி பிரிக்ஸ் உரிமையாளர் ரத்தினசாமி என்பவர் ஸ்ரீபராங்குசநல்லூர் கிராமம் எண். 59/35-ல் அரசு அனுமதியின்றி எடுக்கப்பட்ட 1,134 க.மீ கனிமத்திற்கான அபராதம் ரூ.1,42,884/-


10) ஆழ்வார்தோப்பு கிராமம், PPR பிரிக்ஸ் உரிமையாளர் பிரபாகரன் என்பவர் ஸ்ரீபராங்குசநல்லூர் கிராமம் புல எண். 82/7-ல் அரசு அனுமதியின்றி எடுக்கப்பட்ட 1,761 க.மீ கனிமத்திற்கான அபராதம் ரூ.2,21,886/-


11) ஆழ்வார்தோப்பு கிராமம், சரா சேம்பர் உரிமையளார் ரம்யா என்பவர் ஸ்ரீபராங்குசநல்லூர் கிராமம் புல எண்கள். 2/12. 2/14 ஆகிய நிலங்களில் அரசு அனுமதியின்றி எடுக்கப்பட்ட 1,453 க.மீ கனிமத்திற்கான அபராதம் ரூ.3,71,968/- விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அபராத தொகையினை வருவாய் வசூல் சட்டம் மூலம் மேற்குறிப்பிட்ட 11 நபர்களிடமிருந்து வசூலிக்க ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் மூலம் பல முறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை மேற்படி அபராதத்தொகை அரசுக்கணக்கில் செலுத்தப்படவில்லை. எனவே மேற்குறிப்பிட்ட 11 நபர்கள் தங்களுக்குக் குறிக்கப்பட்டுள்ள தொகையினை உடன் அரசுக்கணக்கில் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தவறும் பட்சத்தில் வருவாய் வசூல் சட்டத்தின்படி இந்த நபர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/