ஆழ்வார்திருநகரி அருகே பால்குளம் பகுதியில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 20 மார்ச், 2024

ஆழ்வார்திருநகரி அருகே பால்குளம் பகுதியில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது.

தூத்துக்குடி மாவட்டம், மார்ச் 17, ஆழ்வார்திருநகரி பகுதியில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது -  சுமார் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள 6½ பவுன் தங்க செயின் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - எதிரிகளை கைது செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.  பாலாஜி சரவணன் பாராட்டு.


ஆழ்வார்திருநகரி அருகே பால்குளம் பகுதியைச் சேர்ந்த சிவந்தி மகன் ராமச்சந்திரன் (85) என்பவர் பெட்டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 13.03.2024 அன்று ராமச்சந்திரன் மற்றும்  அவரது மனைவியுடன் கடையில் இருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் தண்ணீர் பாட்டில் வாங்குவது போல வந்து ராமச்சந்திரனின் மனைவி அணிந்திருந்த 6½ சவரன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளனர்.


இதுகுறித்து மேற்படி ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ரசீதா தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஆழ்வார்திருநகரி மாதாங்கோயில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாரிமுத்து (29) மற்றும் தூத்துக்குடி பேரூரணி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரிக்கண்ணன் (23) ஆகிய 2 பேரும் சேர்ந்து மேற்படி ராமச்சந்திரனின் மனைவியிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.


இதனையடுத்து மேற்படி போலீசார் எதிரிகளான மாரிமுத்து மற்றும் மாரிக்கண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள 6½ சவரன் தங்க நகை மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

மேற்படி எதிரிகளை கைது செய்து திருடப்பட்ட நகை மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/