தூத்துக்குடி - 510 காவலர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் உத்தரவு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 மார்ச், 2024

தூத்துக்குடி - 510 காவலர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் உத்தரவு.

தூத்துக்குடி மாவட்டம், மார்ச் 08, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் 3 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்கள் முதல் சிறப்பு எஸ.ஐ-க்கள் வரை 510 காவல்துறையினருக்கு கலந்தாய்வின் மூலம் பல்வேறு காவல் நிலையங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பொதுமாறுதல் வழங்கி உத்தரவு.



தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி நகரம், தூத்துக்குடி ஊரகம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், மணியாச்சி, கோவில்பட்டி, விளாத்திகுளம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய உட்கோட்ட காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் 3 ஆண்டுகள் பணி முடித்த தலைமை காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை மொத்தம் 510 காவல்துறையினருக்கான கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்கள் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப, காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி ஊரக உட்கோட்டம் ராஜசுந்தர், மணியாச்சி லோகேஸ்வரன், திருச்செந்தூர் வசந்தராஜ், கோவில்பட்டி வெங்கடேஷ், ஸ்ரீவைகுண்டம் மாயவன் உட்பட காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் அமைச்சு பணி அலுவலக கண்காணிப்பாளர் மாரியப்பன் உட்பட அமைச்சுப் பணி உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் முன்பு நடைபெற்றது.



இக்குழுவின் மூலம் காவல்துறையினரின் விருப்பங்களை நேரடியாக கேட்டறிந்து காவல் நிலையங்களில் ஏற்கனவே காலிப்பணியிடங்கள் மற்றும் தற்போது மாறுதலாகி செல்லும் காலிப்பணியிடங்களையும் கணக்கிட்டு அவர்களின் விருப்பத்திற்கேற்ப தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினருக்கு பணி மாறுதல் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad