தூத்துக்குடி மாவட்டம், மார்ச்-06, தட்டார்மடம் பகுதியில் வழிமறித்து தகராறு செய்து தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி கைது.
தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் யேசுராஜசேகரன் தலைமையிலான போலீசார் கடந்த 04.03.2024 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணி நகர் ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு பெட்டிகடையின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில்,
அவர் சாத்தான்குளம் முதலூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மகன் லிவிங்ஸ்டன் சாமுவேல் (எ) பட்டு (25) என்பதும், அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரி லிவிங்ஸ்டன் சாமுவேல் (எ) பட்டுவை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி லிவிங்ஸ்டன் சாமுவேல் (எ) பட்டு மீது ஏற்கனவே தட்டார்மடம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட 4 வழக்குகளும், நாசரேத் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், என 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக