தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், நாசரேத், பிப்.29, நாசரேத் மர்காசியஸ் மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
அந்த புதிய கட்டிடங்களுக்கு தேவையான 26 மின் விசிறிகள், 30 மின் விளக்குகள், அத்துடன் 3 பெரிய ஒளி விளக்குகள், வகுப்பறைக்கு பெயர் பலகைகள் போன்ற ரூபாய் 80 ஆயிரம் மதிப்புள்ள உபகரணங்களை 1992 - 93 ஆம் ஆண்டுகளில் கல்வி கற்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் அர்ப்பணிப்புடன் வழங்கினர்.
இந்நிகழ்வில் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் ஜெபக்கனி சாமுவேல் ராஜ், செல்வராஜ், வேதராஜ், ரத்தினகுமார், செல்வராஜ், தாமஸ் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்களான அகிலன், ஜெபசிங், ராஜாசிங், பட்டு சுரேஷ், ஐஜினஸ், ராம் சிங், பீட்டர், ஜோன்ஸ், அம்மமுத்து மற்றும் ரவி ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர், பின்னர் அனைவரும் ஒன்றாக ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக