தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 85 வயதான முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்குப்பதிவு செய்வதற்கான விருப்ப படிவம் விநியோகம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 மார்ச், 2024

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 85 வயதான முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்குப்பதிவு செய்வதற்கான விருப்ப படிவம் விநியோகம்.

தூத்துக்குடி மாவட்டம், மார்ச் 21,
இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தலில் தகுதியான வாக்காளர்கள் விடுபடாமல், அனைத்து தரப்பினரும் தங்களது வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையாற்றுவதை உறுதி செய்யும் வகையில் 85 வயதான முதியவர்கள் மற்றும் குறைந்தபட்சம் 40 சதவீதம் இயலாமை உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது. 


மேலும், அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகளில் பணியாற்றும் வாக்காளர்கள் தபால் மூலமாக வாக்களிக்கவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்த விரும்பும் வாக்காளர்கள் அதற்கான 12D படிவத்தை தேர்தல் அறிவிப்பாணை வெளியிட்ட 5 நாட்களுக்குள் அளிக்க வேண்டும். 


தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில்  12D படிவத்தை வாக்குச் சாவடிநிலை அலுலர்கள் மூலம் வீடு வீடாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் படிவம் 12D மாவட்ட நிர்வாகத்தின் இணையதளமான www.thoothukudi.nic.in என்ற தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 


இந்த படிவம் மூலமாக வாக்களிக்க விருப்பம் தெரிவிப்பவர்களின் வீடுகளுக்கு நேரடியாக வாக்குப்பதிவு செய்யும் அலுவலர் குழுவினர் செல்வார்கள். அவர்களிடம் வாக்குச்சீட்டுகளை பெற்று தபால் வாக்கு அளிக்கலாம். மேலும், வாக்குச்சாவடி அலுவலர்களின் வருகை மற்றும் தபால் வாக்குமையம் ஆகியவை குறித்து குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.


இதையடுத்து வாக்காளர் பதிவு அலுவலர் / தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், தூத்துக்குடி உதவி தேர்தல் அலுவலர் / தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு ஆகியோர் மாநகராட்சியில் மாதா கோவில் அருகில் கிரகாப் தெருவில் 166வது வார்டில் உள்ள 85 வயதான முதியவர்களுக்கு 12 டி படிவத்தை விநியோகம் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/