தூத்துக்குடி - அதிமுக வேட்பாளராக ஏரல் சிவசாமி அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 மார்ச், 2024

தூத்துக்குடி - அதிமுக வேட்பாளராக ஏரல் சிவசாமி அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்டம், மார்ச் 21, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக ஆா். சிவசாமி வேலுமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.


தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த முதற்கட்ட பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். இந்த பட்டியலில் 16 பேர் இடம் பெற்றிருந்தனர்.


இந்நிலையில் இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார். அதில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக ஆா். சிவசாமி வேலுமணி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட திநகர் பகுதி செயலளாராக உள்ளார். சென்னை வடபழனியில் பாரம்பரிய (பண்டாரவிளை - எலும்பு முறிவு வைத்திய சாலை) மருத்துவமனை நடத்தி வருகிறார். தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி சண்முகநாதனின் உடன் பிறந்த அக்காள் மகன் ஆவார் மேலும் இவர் ஏரல் அருகே உள்ள மங்களபுரம் என்ற ஊரில் பிறந்தவர் என்பது கூடுதல் தகவல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/