தூத்துக்குடி மாவட்டம், மார்ச்.01, புதுக்கோட்டை அருகே மங்களகிரி விலக்கு பகுதியில் தூத்துக்குடி கோட்டாட்சியர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது, அவ்வழியே வெளிர் நிற எம்.சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரியை சோதனை செய்ததில் அனுமதியின்றி எம்.சாண்ட் ஏற்றி வந்தது தெரிய வந்தது. உடனே டிப்பர் லாரியையும், ஓட்டுநரையும் பிடித்து புதுக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார்.
பின்னர், கீழத்தட்டபாறை, ஜோதி நகர் சந்திப்பு அருகில் எவ்வித அனுமதியும் இன்றி குண்டு கல் ஏற்றி வந்த மினி லாரியை மடக்கி பிடித்து தட்டபாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்
இந்த இரு வழக்குகள் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக