சாயர்புரம் - போப் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார முகாம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 மார்ச், 2024

சாயர்புரம் - போப் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார முகாம்.

தூத்துக்குடி மாவட்டம், மார்ச்.01, சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார முகாம்
நடைபெற்றது. 


சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப்  பொறியியல்   கல்லூரியில் தூத்துக்குடி நேரு யுவகேந்திரா அமைப்பும் கல்லூரியின் தேசிய நாட்டு நலப்பணி திட்டம் சார்பாகவும் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார முகாம் நடைபெற்றது. 


இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார்.  கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நேரு யுவகேந்திரா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இசக்கி விழிப்புணர்வு பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 

மாணவர்களுக்கு வாக்களிப்பது அவசியத்தை பற்றி எடுத்துக் கூறி உறுதிமொழி எடுக்கப்பட்டது.  பின்னர் மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது, இந்நிகழ்வை கல்லூரி நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் டென்னிசன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். உடற்கல்வி இயக்குனர் மாதவன் மற்றும் ஜாஸ்பர் விளையாட்டுப் போட்டிகளை  நடத்தினார், மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரி  துறை தலைவர்கள் டாக்டர். விஜயலட்சுமி டாக்டர். ஜேஸ்பர்லின், செல்வரதி, ஜாக்சன், ஆனந்தி, துணை பேராசிரியர் தாமஸ், கனகராஜ், பிரைட்சன், ஆனந்த், வின்சென்ட், நேரு யுவகேந்திரா தேசிய இளைஞர் தொண்டர்கள் செல்வ சுபா, செல்வ லிங்கம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad