தூத்துக்குடி மாவட்டம், மார்ச்.1, ஏரல் வட்டம், ஆழ்வார்திருநகரி, - நவதிருப்பதி தலங்களில் 9வது தலமான ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலையும், மாலையும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்து வருகிறார்.
நேற்று 29.02.24 இரவில் சுவாமி நம்மாழ்வார் உடன் உடையவர், கூரத்தாழ்வான், பிள்ளைலோகாச்சாரியார், மணவாள மாமுனிகள் தேசிகர் ஆகிய ஆச்சாரியர்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார்.
இன்று மார்ச் 1ம் தேதி இரவில் சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரியார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மார்ச் 2ம் தேதி நாளை மதியம் தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழாவில் இறுதி நாளான நாளை மறுநாள் மார்ச் 3ம் தேதி காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதி கோவிலில் எழுந்தருளுகிறார்.
அங்கு திருமஞ்சனம் கோஷ்டி, சாத்துமுறைக்கு பின் இரவு சுவாமி பல்லக்கில் ஆழ்வார் திருநகரி திரும்புகிறார்.
நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், தி.மு.க நகர செயலாளர்கோபி, அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம் (எ) கணேசன். உறுப்பினர்கள் கிரிதரன், செந்தில் குமார், காளிமுத்து, ராம லட்சுமி, செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, கவுன்சிலர் வேதவல்லி முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக